ஜோதிடரைப் பற்றி

DSC_7851

சிவராம்கிருஷ்ணன் சுதர்சன்

பாஸ்கர ஜோதிட கலாரத்னா

மின்னஞ்சல்:
தொலைபேசி எண்:

பாஸ்கரா ஜோதிட கலாரத்னா திரு.சு.சிவராம்கிருஷ்ணன் அவர்கள் (B.E. CIVIL ENGG.) இளநிலை கட்டுமான பொறியியல் படிப்பினை முடித்து, (M.E. ENGG) முதுநிலை படிப்பினை அண்ணா பல்கலைகழகத்தில் முடித்தார், அதோடு MBA வும் முடித்துள்ளார். எல் அண்டு டி குழும நிறுவனம் ஒன்றில் பொறியாளராக 8 ஆண்டு காலம் பணியாற்றினார். தற்போது கார்பொரேட் நிறுவனம் ஒன்றில் உயர் நிலை பொறியாளராக இருந்துவருகிறார். இவரது தந்தை காலஞ்சென்ற திரு.M.சுதர்சன் அவர்களும் ஒரு ஜோதிடராவார். தந்தையுனுடைய ஜோதிட பற்றால்   கவரப்பட்ட இவர், இளமைப்பருவதிலிருந்தே ஜோதிடம், எண்கணிதம், கைரேகை சாஸ்திரம் போன்றவற்றால்  பெரிதும் ஈர்க்கபட்டார். தான் கற்றறிந்த சிலவற்றை நடைமுறையில் பயன்படுத்தும் போது, அதில் பல சிக்கல்கள் உள்ளதையும், அவைகளில் முறையியல் ஒழுங்கு (Methodology) இல்லை என்பதையும் புரிந்து, மேலும் தன் தேடலை தொடர்ந்தார். விடா முயற்சியும், விதியும் அவரை உரிய இடத்தில் சேர்த்தது. பாஸ்கரா ஜோதிடத்தில், மேற்கூறிய முறையில் உள்ள குறைகளை அகற்றும் வகையில், ஒரு வலுவான அடிப்படை(Methodology) இருப்பதை உணர்ந்தார். உடனே குருநாதர் மதுரை பிரசன்ன ஜோதிடமணி திலக் திரு.கி.பாஸ்கரன் அவர்களிடம் சேர்ந்து பாஸ்கரா முறையை முறையாக கற்றார். அன்று முதல் அவருடனிருந்து அம்முறையில் வெற்றிகாணும் மாணவர்கள் பலரில் ஒருவராக இருந்து வருகிறார். 

பாஸ்கரா முறை என்றால் என்ன?

தற்போது உள்ள ஜோதிட முறைகளில், நவீன மற்றும் துல்லிய முறை, பாஸ்கரா ஜோதிட முறையே. தனது வாழ்நாள் கண்டுபிடிப்பான “பாவ முனை தொடர்புகள்” என்ற அடிப்படையில் உருவான “பாஸ்கரா முறை” ஜோதிடத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது என்றால் மிகையல்ல. இவரை நவீன ஜோதிட சிருஷ்டி கர்த்தா / நவீன முறை ஜோதிடர் என்று அழைப்பதே சரி.

♦ ஒவ்வொரு தனி மனித ஜாதகமும், தனிதன்மையனது என்ற அடிப்படையில், ஒரு சில நிமிட இடைவெளியில் பிறக்கும் இரட்டையர்களுக்கு இருவேறு ஜாதகம் கணிப்பதோடு மட்டும் இல்லாமல் இருவேறு பலன்களை கூறும் முறை, பாஸ்கரா முறை

♦ ஒருவரது கேள்விக்கு முடிவான பதிலைக்காண மற்றும் அது நடைபெறும் காலத்தை அறியவும் பாஸ்கரா முறை பயன்படுகிறது

♦ பிறந்த நேர ஜாதகம் இல்லாதவருக்கு, ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, பிரசன்ன முறையில் பலன்களை அறிய முடியும் என்பது இதன் சிறப்பு

SKD_0597

பாஸ்கரா முறையின் தனித்தன்மைகள்

  •  இம்முறை பாவங்கள் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாவங்கள் என்பது விரைவில் நகரக்கூடியது என்பதால், ஒரு நிமிட இடைவெளியில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கும் இருவேறு பலன்கள் கூற முடியும்

    ♦ கணித முறையும் அயனாம்சமும் ஒரு குறிப்பிட்ட முறையில் கணிக்கபடுகிறது

    ♦ ஒருவரது விதி என்னும் கொடுப்பினையை அறியக்கூடிய முறை இதுவே (கொடுக்கபட்டவையும் மறுக்கபட்டவையும்)

    ♦ பிறந்த நேர ஜாதகம் இல்லாதவருக்கு, ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, பிரசன்ன முறையில் பலன்களை அறிய முடியும். உதாரணத்திற்கு, 

    • பிறந்த ஜாதகம் மூலம், நாம் ஒருவரது திருமணத்திற்கு பொருத்தமான    காலத்தை கண்டறிய முடியும். பிரசன்ன முறையில், கொடுக்கப்பட்ட வரன்களில், எந்த வரன் முடியும் என்பதை கண்டறிய முடியும்.
    • பிறந்த ஜாதகம் மூலம், வீடு வாங்க சாதகமான காலத்தை கண்டறிய முடியும். பிரசன்ன முறையில், எந்த குறிப்பிட்ட வீடு முடிவடையும் என்றும் அதில் வில்லங்கம் உள்ளதா இல்லையா என்றும் அறியலாம். 

    ♦ கேள்விக்குரிய பலன்கள் நிகழும் (சம்பவம்) நடைபெறும் காலத்தையும் அறியக்கூடிய முறை

    ♦ எல்லாக் கால சூழல்களுக்கும் ஏற்றாற்போல், பாவ மற்றும் கிரக காரகங்களை, உபயோக படுத்தும் முறை

    ♦ காலச்சக்கரம் என்ற அறிய பொக்கிஷத்தை பயன்படுத்தும் முறை

    ♦ லக்னம் சார்ந்தது சாராதது? ஒருவர் / இருவர் / பலர் சார்ந்த கேள்வி என்று பகுத்து பார்த்து கூறும் முறை

    ♦ இம்முறை ஜோதிட சூத்திரங்களுக்கு உட்பட்டது என்பதால், இருவேறு ஜோதிடரும் ஒரே பலனை கூற வழிவகுக்கும்

Viewers Count: 33