பிரபஞ்ச ரகசியமான ஜோதிடம், மனிதன் தனது பிறவி ரகசியத்தை, பிறந்தக்கால கிரக நிலை மற்றும் பாவங்ககளின் ஆளுமைக்கு எவ்வாறு ஆட்படுத்த படுகிறான் என்ற தேடலுக்கு உட்பட்டது. மனிதன் வாழ்ந்த காலந்தொட்டே ஜோதிடமும் இருந்ததாக கருதப்படுகிறது. மனிதன், கால சுழற்சியின் மூலம் தட்ப வெப்ப மாறுதல்களை அறிய முற்பட்டான். முதலில் ஜோதிடம் ஒரு நாட்டின் நிலையை அறிய பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக ராமன்(ரா) சீதை(சி) என்ற தனி மனிதர்களுக்கு பயன்படுத்தப்பட்டதாலேயே இதனை ராசி என்று அழைக்கப்பட்டது.
♦ கிரகங்களை அடிப்படையாக கொண்டு பலன் கூறும் வாக்கிய முறை
♦ ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தின் பலனை தரும் என்ற அடிப்படையில் பலன் கூறும் திருக்கணித முறை
♦ யோகம், தோஷம் போன்றவைகளின் அடிப்படையில் பலன் கூறும் திரு.பி.வி.ராமன் முறை
♦ 27 நட்சத்திரத்தை 243 புத்திகளாக, நட்சத்திரத்தை பிரித்து “உபநட்சத்திரம்” கொண்டு பலன் கூறும் மீனா திரு.கோபாலகிருஷ்ணராவ் முறை
♦ 243 புத்திகள் என்பதை 249 புத்திகளாக பாவங்களுக்கு பகுத்துக்கொடுத்து, திருக்கணித முறையை போல் கிரகம் தான் நின்ற நட்சத்திரம், பார்வை, ஆட்சி, உச்சம், நீச்சம் மூலம் பலன் கூறும் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின், “கிருஷ்ணமூர்த்தி பத்ததி” முறை என்று நடைமுறையில் பல ஜோதிட முறைகள் உள்ளன.
இதிலிருந்து வேறுப்பட்டு, மதுரை பிரசன்ன ஜோதிடமணி திலக். திரு.கி.பாஸ்கரன் அவர்கள் உருவாக்கியது “பாஸ்கரா ஜோதிட முறை”. கிரக நிலை என்பது விரைவாக மாறகூடியதல்ல, பாவங்கள் மட்டுமே விரைவாக மாறக்கூடியது என்பதை அறிந்து பிலசிடியஸ் முறையில் பாவ ஆரம்ப முனைகளை கண்டறிந்து “பாவ முனை தொடர்புகள்” என்ற அடிப்படையில் உருவானது “பாஸ்கர ஜோதிட முறை” இரட்டையர்களுக்கும் இரு வேறு ஜாதகம் கணிக்கப்பட்டு, இரு வேறு பலன்கள் கூறும் முறையாகும். இது ஜோதிடத்தின் அடுத்த நிலை.
ஜோதிடம் என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்தது. நமது முன்னோர்கள் ஜோதிடம் என்ற இந்த அறிய பொக்கிஷத்தை அவரவர் காலகட்டத்தில், அவரவர் கண்டறிந்த தகவல் மற்றும் அனுபவத்தின் (கணிதமும் விதிகளும்) அடிப்படையில் நமக்கு அளித்துள்ளனர். காலபோக்கில் இந்த கருத்துக்கள் திரிக்கப்பட்டு, மற்றவர்களின் கருத்துக்கள் திணிக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் உள்ள நவீன முறைகளை கொண்டு கிரகங்களின் நிலைகளை துல்லியமாக கண்டறிய முடியும் பட்சத்தில், அதனை எடுத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஜோதிடம் என்பது மெய்ஞானம் சார்ந்த விஞ்ஞானம் என்றாலும் பலரால் இது விஞ்ஞானம் சார்ந்த மெய்ஞானம் என்று கருதப்படுகிறது. எது எப்படியாயினும் நவீன முறைகளை கொண்டு கணித முறையையோ அல்லது மற்ற கருத்துக்களையோ துல்லிய படுத்த வேண்டும் என்பதில் துளியும் ஐயமில்லை. இவ்வாறு ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலமே நாம் துல்லிதத்தை நோக்கி செல்ல முடியும். இன்றைய காலகட்டத்தில் ஜோதிடம் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் பாடமாக கொண்டுவந்துள்ள நிலையில், ஜோதிடத்தை அறிவியலுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு ஜோதிடருக்கும் உண்டு. இத்தருணத்தில் ஜோதிடத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஒவ்வொருவருக்கும் குறிப்பாக நமது முன்னோர்களுக்கு நமது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். இதற்கு முன்னுதாரணமாக, தன்னுடைய 30 ஆண்டு கால உழைப்பினை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் எல்லோரும் பயன் பெற வேண்டும் என்ற பரந்த மனதோடு, தான் கண்டறிந்து உணர்ந்த ஞானத்தை, இவ்வுலகிற்கு கொடுத்த எனது குருநாதர் மதுரை பிரசன்ன ஜோதிடமணி திலக் திரு.கி.பாஸ்கரன் அவர்களின் பங்களிப்பு காலத்தால் அழியாதது என்பது திண்ணம்.