விஞ்ஞான ஜோதிடம் – வாழ்வின் வழிக்காட்டி

பாஸ்கரா ஜோதிட முறை, ஒரு முறையியல் ஒழுங்கோடும் அறிவியலின் அடிப்படையோடும் அமைவதால், இதை “விஞ்ஞான ஜோதிடம்” என்று கருதப்படுகிறது. சிறிய பிரியாணங்களுக்கே GPS MAP NAVIGATION (GOOGLE MAP) பயன்படுத்தும் நாம், நம் வாழ்க்கை என்னும் இந்த நீண்ட பிரயாணத்தின் நெளிவு சுழிவுகள், மேடு பள்ளங்கள், நல்லவை கேட்டவை, கொடுக்கபட்டவை மறுக்கபட்டவைகளை ஜோதிடம் என்னும் “வாழ்வின் வழிக்காட்டி(வரைப்படம்)” மூலம் அறிந்து கொண்டு செயல்படுவது தானே சரி!!!

சுருங்க சொன்னால்,

1. ஒருவரது விதி என்னும் கொடுப்பினையை அறிய

2. கொடுக்கபட்டவையும் மறுக்கபட்டவையும் அறிய

3. கொடுக்கபட்டவை என்றால் சம்பவம் (கேள்விக்குரிய பலன்கள்) நடைபெறும் காலத்தை அறிய

4. மறுக்கப்பட்டவை என்றால் அதனை கையாளும் முறையை அறிய

பாஸ்கரா ஜோதிட முறை பயன்படுகிறது.

வெற்றிகரமான வாழ்விற்கு ஜோதிடத்தின் பயன்பாடு

இதனை ஒரு உதாரணத்தோடு அறிவோம். அன்பர் ஒருவர் தனக்கு குழந்தை பாக்கியம் உண்டா என்று வினவினார்? அவருடைய ஜாதகத்தை ஆய்வு செய்ததில் குழந்தை உண்டு என்று அறியப்பட்டது. உடனே அவரோ எப்போது என்றார்? அவருக்கு 2020ல் தான் குழந்தை பாக்கியம் உண்டு. மாறாக இடைப்பட்ட காலத்தில், அவரது நேரம், வியாபாரத்திற்கு சிறப்பாக உள்ளது. வாடிக்கையாளர் இதனை புரிந்து கொண்டு மேற்கூறப்படி

அ)

1 மற்றும் 3ன் படி 2025ல் குழந்தைக்கு முயற்சிக்கலாம்

ஆ):


இடைப்பட்ட காலத்தில், 2 மற்றும் 4ன் படி, எல்லாவித முயற்சியும் மேற்கொண்டு தன் உழைப்பு, நேரம் மற்றும் பணத்தை 2020 வரை விரயம் செய்து வேறு வழி இல்லாமல், 2020ல் குழந்தையை பெறலாம். மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில், அவர் வியாபாரத்தின் மூலம் பெற்றிருக்க வேண்டிய லாபத்தையும் இழக்க நேரிடும்.

இதில் எது விரும்பத்தகது ? வாசகர்கள் சிந்திக்கவும்!

இது விதியை மாற்றும் முயற்சி அல்ல. தனக்கு எது எப்போது கிடைக்கும் என்று அறிந்து அதை அப்போது செய்வது தானே சரி. சுருங்க சொன்னால், தான் செய்ய விரும்பும் காரியத்திற்கு, சாதகமான நேரம் எது என்பதை அறிய தானே “ஜாதகம்” பார்க்க வேண்டும், ஜோதிடம் என்ற கருவியைப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்க மற்றும் நீங்கள் அறிய நினைக்கும் விஷயங்களுக்கு முடிவான பதிலை காண முன் அனுமதியோடு எங்களை அணுகவும்.

Viewers Count: 26